காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி - பிரதமர் மோடி குற்றச் சாட்டு

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி என பிரதமர் மோடி குற்றச்சாட்டி உள்ளார்.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பிரதமர் மோடி கடந்த சில தினங்களாக பா.ஜனதா - சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் அகோலா என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தில் இன்று பங்கேற்றார்.
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:-
காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி. இந்த கூட்டணி 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து மகாராஷ்டிரா  மாநிலத்தை சீரழித்து விட்டது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்தது குறித்து காங்கிரஸ் கூட்டணியினர் மகாராஷ்டிரா தேர்தலில் பிரச்சினை எழுப்புவது மிகவும் அவமானமானது.
காஷ்மீர் விவகாரம் மகாராஷ்டிரா தேர்தலில் எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதை எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்துத்வா சிந்தனையாளரான சாவர்க்கர் இந்த நாட்டுக்காக பெரும்பாடுபட்டவர். தேசியத்தை ஊக்குவித்தவர். பாரத ரத்னா விருதுக்கு சாவர்க்கர் தகுதியானவர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Popular posts
<no title>பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
Image
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
Image
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவர் சைய்மன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்
Image