அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழா

அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கொடி தோரணங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று தலைமை கழகத்துக்கு வந்திருந்தனர்.
அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு இருவரும் மாலை அணிவித்து வணங்கினார்கள். கட்சி கொடியை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றி வைத்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர் வாழ்க, புரட்சி தலைவி வாழ்க என்று கோ‌ஷமிட்டனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பொள்ளாச்சி ஜெயராமன், வைகை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜலட்சுமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், முகப்பேர் இளஞ்செழியன், மின்சாரம் சத்திய நாராயண மூர்த்தி, ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழா கொண்டாடப்பட்டது.


Popular posts
<no title>பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
Image
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
Image
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவர் சைய்மன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்
Image