சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் தங்கம் விலை சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில்,
இன்று தங்கம் விலை உயர்வு தொடங்கிவிட்டது. நவம்பர் மாதத்தைப் போலவே இந்த மாதமும் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்படுமா என்ற அச்சம் வாடிக்கையாளர் மத்தியில் நிலவுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை
இன்று (டிசம்பர் 3) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.3,623 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,617 ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 28,936 ரூபாயிலிருந்து இன்று 28,984 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 48 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.