வயிற்று உப்புசம்
சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு வீங்கியதாக உணரும்போது அதனை வயிறு உப்புசம் அல்லது வயிறு மாந்தம் என்று கூறுவார்கள். இந்த வீங்கிய வயிறு உங்களுக்கு அசௌகரியத்தையும், குமட்டலையும், உங்கள் வழக்கமான வேலையைச் செய்வதில் சிரமத்தையும் ஏற்படுத்தும். இதை எப்படி வீட்டு வைத்தியத்தின் மூலம் எந்த வித மாத்திரை, மருந்துகளும் இல்லாமல் சரிசெய்ய முடியும். அதுவும் உப்பசம் வருவதற்கு முன்னமே எப்படி தவிர்க்க முடியும் என்று தெளிவாகப் பார்க்கலாம்.
வயிறு உப்புசம் ஏன் ஏற்படுகிறது?
அதிகப்படியான வாயு உற்பத்தி அல்லது செரிமான அமைப்பின் தசைகளின் இயக்கத்தில் ஏற்படும் தொந்தரவு காரணமாக வயிற்றில் வீக்கம் ஏற்படுகிறது.இது வலியை உண்டாக்கும். மேலும் வயிறு அடைத்த உணர்வு மற்றும் ஒருவித அசௌகரியம் போன்றவை உண்டாகும்.
உப்புசம் என்பது உங்கள் செரிமான அமைப்பில் அதிகப்படியான திடப்பொருள்கள், திரவங்கள் அல்லது வாயுவைக் குறிக்கிறது. சுமார் 16-30 சதவிகித மக்கள் வழக்கமான வயிறு உப்புசத்தை அனுபவித்ததாக தெரிவிக்கின்றனர், இது மிகவும் பொதுவான பிரச்சினையாக மாறிவருகிறது.
ஒரு எளிய பானம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, இது இரண்டு-மூன்று வாரங்களுக்கு உட்கொள்ளும்போது உங்கள் வயிற்று உப்புச சிக்கலைத் தீர்க்கும்