வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை… பின்லாந்து பிரதமரின் புதிய திட்டம்

வேலை நாட்களிலும் ஒரு நாளின் வேலை நேரத்தை 8 மணிநேரத்திலிருந்து 6 மணிநேரமாகக் குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


நாட்டில் ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் சன்னா மரின் அறிவித்துள்ளார்.


வாராந்திர வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட வாய்ப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சன்னா மரின் கடந்த டிசம்பர் மாதம் பின்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றார். அந்நாட்டில் உள்ள பல கட்சி கூட்டணி ஆட்சியில் பிரதமராகியுள்ள இவர், தற்போது உலகின் மிக இளம் வயது பெண் தலைவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.

இது பற்றி கூறும்போது, "மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். நேசிப்பவர்களாக நேரம் ஒதுக்குவது, பொழுதுபோக்கு, கலாச்சாரம் போன்ற வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்." என சன்னா மரின் தெரிவித்துள்ளார்.


Popular posts
<no title>பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
Image
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
Image
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவர் சைய்மன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்
Image