பின்லாந்தில் நடைபெற்றுவந்த தொழிலாளர் போராட்டத்தைத் தொடர்ந்து வேலை நாட்களைக் குறைக்கும் திட்டத்தை பிரதமர் மரின் அறிவித்திருக்கிறார். சம்பள உயர்வு, மேம்பட்ட பணிச்சூழல் முதலியவற்றுக்கு உத்தரவாதம் அளித்ததால் பல மாதங்களாக நடந்த போராட்டம் விலகிக்கொள்ளப்பட்டது.
20ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த தொழிலாளர் இயக்குத்துக்குப் பின், தொழிலாளர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களைக் கருத்தில்கொண்டு படிப்படியாக வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் நாளுக்கு 8 மணிநேர வேலையும் பரவலானது. காலப்போக்கில் ஒரு வாரத்தில் நாளுக்கு 8 மணிநேரம் வீதம் ஐந்து நாட்கள் வேலை என்பதே பொதுவான நடைமுறையாகிவிட்டது.
பணி வாழ்க்கையின் அடுத்த கட்டமாக இது அமையும்